spot_imgspot_img

பங்குதாரர் ஒப்பந்தங்கள்

ஒரு புதிய வணிகத்தைத் தொடங்கும்போது, அனைத்து பங்குதாரர்களும் ஒரே போக்கில் உள்ளதை நீங்கள் உணரலாம். அத்துடன் எந்த பிரச்சினை எழுந்தாலும், உணவு உண்ணும் மேசையிலேயே ஒன்றாகப் பேசி தீர்ப்பது பெரும் காரியம் அல்ல, குறிப்பாக இது குடும்ப உறுப்பினர்கள் அல்லது நெருங்கிய நண்பர்களால் தொடங்கப்பட்ட வணிகமாக இருந்தால் இன்னும் எளிது. துரதிர்ஷ்டவசமாக, எந்த நேரத்திலும் பிரச்சனைகள் மற்றும் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம் மற்றும் நெருங்கிய தொடர்புகள் மற்றும் பல விடயங்கள் எழுத்து வடிவில் இல்லாமல் இருக்கலாம் என்ற உண்மையின் காரணமாக இந்த பிரச்சனைகள் துல்லியமாக தீர்க்க கடினமானவையாக இருக்கும். மக்கள் தனித்துவமானவர்கள் மற்றும் விடயங்களை வித்தியாசமான கண்ணோட்டத்துடன் பார்க்கிறார்கள். மேலும் ஒரு வணிகத்தை நடத்துவது பற்றி கருத்து வேறுபாடுகள் எழும்போது, அவரவர் பார்வைகளில் உள்ள வேறுபாடு நீங்கள் எதிர்பார்த்ததை விட மிக அதிகமாக இருக்கும்.

நீங்கள் வேறு யாருக்கும் பங்கு கொடுக்காத ஒரே ஸ்தாபகராக இல்லாமல் இருந்தால், உங்களிடம் இணை ஸ்தாபகர், முதலீட்டாளர்கள் மற்றும் முக்கிய பணியாளர்கள் இருப்பார்கள். ஆனால் நீங்கள் வியாபாரத்தின் ஆரம்பத்தில் இருக்கும் போது, உங்களால் தனிப்பட்ட முறையில் நடத்தப்படும் நிறுவனத்தில் பங்குதாரர்களின் பல்வேறு உரிமைகள் மற்றும் கடமைகளை எழுத்து வடிவில் கட்டமைக்க வேண்டிய அவசியத்தை நீங்கள் உணர்ந்திருக்க மாட்டீர்கள். மேலும் வலுவான பங்குதாரர் உடன்படிக்கைக்கு நீங்கள் முன்னுரிமை அளிக்காமல் இருக்கலாம். ஒரு பங்குதாரர் ஒப்பந்தம் சில உறவினர்கள் அல்லது நண்பர்கள் மீது சந்தேகத்தின் உணர்வை தூண்டக்கூடும் என நீங்கள் உணரலாம். இது வணிகத்திற்கு தற்போது சிறப்பாக செயல்படும் அவர்களின் ஆர்வங்களின் சமநிலையை பாதிக்கலாம் மற்றும் சீர்குலைக்கலாம் என நீங்கள் எண்ணக்கூடும். இருப்பினும், இது முற்றிலும் நேர்மாறானது – இதிலும் விதிவிலக்குகள் கிடையாது.

வணிகத்திற்குள் நியாயமான தொடர்புகளை உருவாக்குவதற்கும், வணிகம் எவ்வாறு செயல்படுகிறது மற்றும் விரும்பத்தகாத அல்லது சாத்தியமில்லாத சூழ்நிலையில் என்ன நடக்கிறது என்பது குறித்து பங்குதாரர்களிடையே தெளிவை உருவாக்குவதற்கும் பங்குதாரர் ஒப்பந்தம் அமைக்கப்பட்டுள்ளது. இது அனைத்து பங்குதாரர்களுக்கும் சட்டபூர்வமான ஒரு பிணைப்புக் கட்டமைப்பை வழங்குகிறது. இதனால் அவை ஏற்படுவதற்கு வாய்ப்புகள் மற்றும் மிகவும் விரும்பத்தகாத அல்லது தெளிவற்ற சூழ்நிலைகளுக்கு வழிவகுக்கும் முன் பலவிதமான கருத்து வேறுபாடுகளுக்கு தீர்வு வழங்க முடியும். ஒரு பங்குதாரர் ஒப்பந்தம் அனைத்து தரப்பினரும் ஒரு கூட்டு முடிவெடுக்கும் செயல்முறைகள் மூலம் வணிகத்தை இணக்கமாக வளர்க்க உதவும், மேலும் திட்டத்தின் படி விடயங்கள் நடக்காதபோது, அது எழுத்துபூர்வ பதில் அல்லது பிரச்சனைக்கு ஒரு நிலைப்பாட்டை அளிக்கிறது.

பொதுவாக, ஒரு பங்குதாரர் ஒப்பந்தம் பின்வருவனவற்றை உள்ளடக்கியது மற்றும் எந்தவொரு வணிகக் கட்டமைப்பிற்கும் பொதுவானது.

பணிப்பாளர் சபை அங்கத்தவர்கள் 

இது ஒரு மூலோபாய மேற்பார்வைப் பாத்திரமாகும், இது பெரிய அளவிலான வணிகங்களில் முகாமைத்துவ நிர்வாக அணியிலிருந்து வேறுபட்டிருக்கலாம், ஆனால் சிறிய அளவிலான வணிகங்களில் இது தனித்துவமாக இருக்காது. பங்குதாரர்களின் ஒப்பந்தத்தில் பின்வருவன அடங்கும்:

  • பணிப்பாளர் சபை அங்கத்தவர்களின் கட்டமைப்பு மற்றும் நியமனம் தொடர்பான குறிப்பிட்ட விதிகள்
  • பணிப்பாளர் சபையில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை
  • அதிகாரமற்ற பணிப்பாளர்களின் இருப்பு மற்றும் நியமனம்
  • பணிப்பாளர்களின் பங்குரிமை நலன்
  • சபைக்கான அல்லது குறிப்பிட்ட பாத்திரங்களுக்கான அதிகாரங்கள் மற்றும் வலுக்கள் வெளிப்படையான ஒதுக்கீடு  
  • பணிப்பாளர் சபையின் விசேட குழுக்கள் அல்லது விசேட அறிக்கையிடல் கட்டமைப்புக்கள், உ-ம். கணக்காய்வு விடயங்களுக்கு

வாக்குரிமை

2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டத்தில் (Companies Act of 2007) சில முன்நிபந்தனைகள் உள்ளன, சில தீர்மானங்களுக்கு பெரும்பான்மை வாக்குகள் (51%) தேவை, சிலவற்றிற்கு 75% பெரும்பான்மை வாக்குகள் தேவை. எவ்வாறாயினும், ஒரு நிறுவனத்தை பாதிக்கக்கூடிய பல தீர்மானங்கள் (உ.ம்: நிதியளித்தல், முக்கிய நோக்கங்கள்) நிறுவனங்களின் சட்டத்திற்கு வெளியே அமையாது. எனவே அதற்கு நேர்மாறான விதிகள் இல்லாவிட்டால் அவை பணிப்பாளர் சபை அங்கத்தவர்களின் கைகளில் விடப்படுகின்றன.

மேலும், பங்குதாரர்களின் ஒப்பந்தம் அனைத்து பங்குதாரர்களின் ஒருமித்த ஒப்பந்தத்தின் மூலம் மட்டுமே திருத்தம் செய்யப்படும். அதேசமயம் சங்கத்தின் அமைப்பு விதிகளில் மாற்றத்திற்கு 75% பெரும்பான்மை மட்டுமே தேவைப்படுகிறது. எனவே பங்குதாரர்களின் ஒப்பந்தம் சிறுபான்மை பங்குதாரர்களுக்கு கூடுதல் பாதுகாப்பை வழங்குகிறது.

பணப்புழக்கத்தை கருத்தில் கொள்ளுதல்

தற்போதுள்ள எவருக்கும் செலுத்தப்படும் எந்தவொரு கொடுப்பனவும் ஒரு நிறுவனத்தின் பணப்புழக்கத்தை பாதிக்காமல் இருப்பதை உறுதி செய்வதன் மூலம் நிறுவனத்தையும் அதன் அனைத்து பங்குதாரர்களையும் பாதுகாப்பது அவசியம். இருப்பினும், பங்குதாரர் ஒப்பந்தம், வெளியேற முடிவு செய்யும் ஒரு பங்குதாரர் தனது பங்குகளுக்கு நியாயமான மதிப்பைப் பெறுவதை உறுதி செய்வது ஒரு நிறுவனத்தின் பொறுப்பு என்றும் கூறுகிறது.

பங்குகள் பரிமாற்றம்

பங்குகளின் பரிமாற்றத்தை நிர்வகிக்க விதிக்கப்படும் விதிகள் உள்ளன. உதாரணத்திற்கு,

  • கட்டுப்பாடு: சில பரிவர்த்தனைகளுக்கு நிச்சயமாக ஒரு குறிப்பிட்ட பங்குதாரரின் ஒப்புதல் தேவை.
  • வெளியாட்கள் பங்குகளை வைத்திருப்பதைத் தடுப்பது: பங்குகளை இல்லாத பங்குதாரருக்கு அறிமுகப்படுத்தும் முன், பங்குகளை ஏற்கனவே வைத்திருக்கும் பங்குதாரர்களுக்கு வழங்க வேண்டும்.
  • மரணம் அல்லது விவாகரத்துக்கான சூழ்நிலைகளில் வழங்குதல்: பங்குகளை வாழ்க்கைத் துணைக்கு அல்லது வாழ்க்கைத்துணையைத் தவிர வேறு ஒரு குடும்ப உறுப்பினருக்கு மாற்றுதல்.

பங்குகளின் மதிப்பீடு

ஒரு பங்குதாரர் வெளியேற விரும்பினால், பங்குகளின் சரியான மதிப்பீட்டிற்கு வர சில விதிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

சர்ச்சைக்கான தீர்வு

பங்குதாரர்களின் உடன்படிக்கை பங்குதாரர்களிடையே உள்ள சச்சரவுகளைத் தீர்க்க ஒரு பயனுள்ள வழிமுறையை வழங்குகிறது. சர்ச்சைகள் இரகசியமாக வைக்கப்படும் என்றும் உறுதியளிக்கிறது. பல நிறுவனங்கள் ஒரு நடுவர் விதியைச் சேர்த்துள்ளன, இது அனைத்து பங்குதாரர்களையும் ஒரு சுயாதீன நடுவரின் முடிவோடு பணிபுரியவும், அதற்குக் கட்டுப்படவும் செய்கிறது.

பங்குஇலாபத் தொகை கொள்கை

பங்குதாரர்களிடையே நல்லிணக்கத்தைப் பேணுவதற்காக, நிறுவனம் ஒரு பங்குஇலாபத் தொகை கொள்கையை கொண்டிருக்கலாம்.

இந்த காரணிகள் உங்கள் பங்குதாரர் ஒப்பந்தத்தில் இருக்கலாம் அல்லது இல்லாமல் இருக்கலாம். ஒவ்வொரு பங்குதாரரின் ஒப்பந்தமும் வணிகம் மற்றும் அதன் பங்குதாரர்களின் குறிப்பிட்ட நிபந்தனைகளுக்கு ஏற்ப தனிப்பயனாக்கப்படும் என்பதை உணர வேண்டியது அவசியம். விரும்பத்தகாத சூழ்நிலைகள் ஏற்படுவதற்கு முன்பே, ஒப்பந்தம் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படும் என்பதை முன்கூட்டியே மற்றும் ஒத்துழைப்புடன் உறுதிப்படுத்துவது பங்குதாரர்களின் பொறுப்பாகும்.

Get in Touch

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

spot_imgspot_img

Related Articles

spot_img

Get in Touch

Latest Posts

X