spot_imgspot_img

பெண் தொழில்முனைவராக வெற்றியீட்டல்

‘மகளிர் தொழில்முனைவோர்’ – பெண் என்ற சொல் முன்னால் வர வேண்டும் என்பது உண்மையில்
பிரச்சினையாகவே உள்ளது. தொழில்முனைவோர் என்பது தனது சொந்தத் தொழிலைத் தொடங்கிய
ஒருவராவார். (எளிமையான வரைவிலக்கணம்), அந்த நபரின் பாலினம் இதற்கு முக்கியமற்றதாக இருக்க
வேண்டும். இருப்பினும், சமத்துவமற்ற சம்பளம் முதல் வியாபார உலகில் பெண்களுக்கான சமத்துவம் பாரிய
பிரச்சினையாகவே உள்ளது. இன்று, தொழில்முனைவோர்கள் அடிப்படையிலேயே புதிய போக்குகளை
நிர்மாணிக்கவும், தடைகளை உடைக்கவும் பெண்களை ஊக்குவிக்கவும் பெண் தொழில்முனைவோர்கள்
அதிகம் உள்ளனர். அப்போதும் கூட, சில பெண்கள் தங்களுக்கு ஏதோ குறை இருப்பதாகவோ அல்லது
அவர்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளப்படுவதில்லை என்றோ உணர்கின்றனர். எனவே ஒரு பெண்
தொழில்முனைவோராக உங்கள் பாதையை உருவாக்க உதவும் சிறு மற்றும் பயனுள்ள வழிகாட்டுதல்கள்
கீழே தரப்பட்டுள்ளன.

ஒரு பெண் தொழில்முனைவராக உங்களை அறிமுகப்படுத்துங்கள்

தொழில்முறை விஷயங்களில் பெரும்பாலான பெண்கள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால்களில் ஒன்று,
அவர்கள் அதனை பாரதூரமான விடயமாக எடுத்துக்கொள்வதில்லை என்பதாகும். இதனை தவிர்ப்பதற்கு
தொழில்முறை மற்றும் வலுவானதொரு தோற்றத்தை முதலில் உருவாக்குவது அவசியம். உங்கள் முதல்
மற்றும் கடைசி பெயருடன் உங்களை அறிமுகப்படுத்துவதைப் போலவே இதையும் எளிமையாக செய்யலாம்
என்பதை எடுத்துக்கூற முடியும். உதாரணமாக, ‘வணக்கம். நான் XYZ நிறுவனத்தின் ஸ்தாபகர் டீனா சில்வா
என அறிமுகப்படுத்துங்கள்.

வேலை மற்றும் வாழ்க்கையை சமமாக வைத்திருங்கள்

பெண்கள் பலபணிகளை செய்வதில் சிறந்தவர்களாக விளங்குகின்றனர். இருப்பினும் வாழ்க்கையும்
வேலையும் ஒன்றோடு ஒன்று முரண்படு;ம்போது, இறுதியில் எதனையும் சரியாக செய்து முடிக்காமல் திணற
வேண்டி வரும். குறிப்பாக நீங்கள் ஒரு தாயாகவும் மனைவியாகவும் இருக்கும் அதேநேரம், ஒரு
வியாபாரத்தின் உரிமையாளராகவும் இருக்கும்பட்சத்தில் அந்த வேலை மற்றும் வாழ்க்கை சமநிலையில்
பேணுவது மிக முக்கியமானதாகும். அட்டவணை மற்றும் காலகட்டதை வைத்திருந்து அதற்கேற்ப
செயற்படுவது உங்கள் பணியை எளிமையாக்கும். உங்கள் வேலையை வீட்டிற்கு எடுத்துச் செல்லவோ
அல்லது உங்கள் வீட்டை வேலைக்கு கொண்டு வரவோ வேண்டாம்.

நம்பிக்கையான ஒத்துழைப்பு கட்டமைப்பை நிறுவுதல்

பாலினத்தைப் பொருட்படுத்தாமல் நம் அனைவருக்கும் வலுவான ஆதரவு அமைப்பு தேவை. ஒரு வலுவான
ஆதரவு அமைப்பைக் கொண்டிருப்பது, உங்களின் சொந்தத் தொழிலை அமைக்கும் போது நீங்கள்
எதிர்கொள்ளும் பல முரண்பாடுகள் இருந்தாலும், உங்களை தொடரச் செய்து, ஊக்கமளிக்கும்
காரணியாகவே அது இருக்கும். உங்கள் குடும்பம், உங்கள் பங்குதாரர், பிள்ளைகள் அல்லது உங்களை
அறிந்த மற்றும் உங்களுடனுள்ளவர்கள் உங்கள் ஆதரவு அமைப்பாக இருக்கலாம்.

தனிமையில் இருப்பது

சில நேரங்களில் தொழில்முனைவு என்பது ஒரு தனிமையான வியாபாராமாக இருக்கலாம். குறிப்பாக நீங்கள்
ஒருவருக்காக வேலை செய்வதிலிருந்து உங்களுக்காக வேலை செய்யும் நிலைக்கு மாறலாம். நீங்கள் 30
பணியாளர்களைக் கொண்ட அலுவலகத்திற்கு உங்கள் வீட்டிலுள்ள அறையிலிருந்து செல்லக்கூடும்.
நீங்களே வேலை செய்யலாம். மாற்றம் கடுமையானதாகவும், அது சவாலானதாக இருந்தாலும் தனிமையை
அனுபவிக்கவும், அதற்குப் பதிலாக அதை சுதந்திரமாகவும் பார்க்கவும் கற்றுக்கொள்ளுங்கள். இது
உங்களுக்கு வியாபாரத்தை வெற்றிகரமாக கொண்டு செல்வதற்கு உதவும்.

ஒரு பெண் தொழில்முனைவோராக இருப்பது பெருமைப்பட வேண்டிய விஷயம். நீங்கள் பல சவால்களை
சந்திக்க நேரிடலாம், ஆனால் வெற்றிக்கான பாதை எளிதான ஒன்றாக இருந்ததில்லை. உங்கள்
தொழில்முறை வளர்ச்சிக்கு உதவும் கூடுதல் உதவிக்குறிப்புகளைப் பற்றி தொடர்ந்து தெரிந்துகொள்ள
எம்மை தொடர்ந்து பின்தொடருங்கள்.

பெண் தொழில்முனைவராக வெற்றியீட்டுவது பற்றி அறிந்து கொள்ள திரிய இணையத்தளத்தைப் பார்க்கவும்.

Get in Touch

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

spot_imgspot_img

Related Articles

spot_img

Get in Touch

Latest Posts

X